Menu
Log in


Log in


Wordle: An Essay in Tamil

31 May 2022 4:52 PM | Anonymous

வேர்டல்: தமிழ்

ப்ரீத்தி சிவசங்கர் மற்றும் ஸ்ருதி சிவசங்கர் 

வேர்டல்: இது மொழி சார்ந்த விளையாட்டு. இந்த “வார்த்தை விளையாட்டு” அலை, நம் நாட்டையும் நம் உலகத்தையும் ஆக்கிறமித்துக் கொண்டுள்ளது. இந்த கட்டுரையில்,  வேர்டலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நாம் ஆராய்வோம். நாம் ஏன் வேர்டலின் மாயவலைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதைபற்றி படித்து அனுபவியுங்கள்!

வேர்டல் மிக பிரபலமானதற்க்கு பல காரணங்கள் உள்ளன. வேர்டலை சுலபமாக புரிந்து  விளையாடலாம். உலகளாவிய மக்களுக்கு பிடிக்கும். எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம். இறுதியாக, வேர்டல் மூளையின் தர்க்கம் மற்றும் மொழி சார்ந்த பகுதிகளை ஊக்குவிக்கின்றது. இதனால் ‘டோபமைன்’ ஹார்மோன் ஊக்குவிப்பு, மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

வெர்டல் மொழி ஆற்றலை முன்னேற்றுகின்றது என்று ஆசிரியர்களும், மொழி  ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். மேலும், வேர்டல் மக்களுக்காக புதிய வார்த்தைகளை அறிமுகபடுத்துகின்றது. அதனால் வேர்டல் மொழியின் ஆற்றலை முன்னேற்றுகிறது.

மக்களுக்கு வேர்டல் மீது மிகுந்த நாட்டம் ஏன்? வேர்டல் மூளையின் தர்க்கம் மற்றும் மொழி சார்ந்த பகுதிகளை ஊக்குவிக்கிறது. நாம் வேர்டலில் வார்த்தையை தினமும் கண்டுபிடித்தவுடன், மூளையில் ‘டோப்பமின்’ என்னும் ரசாயனம் நமக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. வேர்டல் சூதாட்டம் போல் இல்லை, ஏனென்றால் வார்த்தையை கண்டுபிடிப்பதற்கு பரிசு இல்லை. மற்றும் தினமும் ஒரு முறை தான் விளையாட முடியும்.  வேர்டலை உருவாக்கியவர் கூட, "ஒரு நாளைக்கு மூன்று நிமிடங்களுக்கு மேல் எடுக்காது" என்று கூறுகிறார். அதேசமயம் வேர்டலின் நாட்டத்திற்கு காரணம் 'பற்றாக்குறைக் கோட்பாடு' என்கின்றனர்: பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது மக்கள் அதற்க்காக ஏங்குவார்கள்.வேர்டல் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கின்றது. அது நல்லதா கெட்டதா? நீங்களே முடிவு செய்யுங்கள்!◾️

Wordle

Preethi Sivashankar and Shruti Sivashankar

Wordle: The language-based sensation that’s sweeping the nation and taking the world by storm. In this article we will investigate everything you need to know about Wordle; what it is, its popularity, how it helps you learn a language, similar games, and whether Wordle is addictive. Stick with us to find the answers to all these questions! 

There are many reasons why Wordle is so popular. It’s easy to understand and play, it appeals to a worldwide audience, and can very easily be shared. Finally, while playing Wordle, the language and logic parts of the brain are activated. This activation releases dopamine, which is a hormone that is associated with happiness.

People think Wordle is a rewarding way to learn new words. English teachers also agree that Wordle keeps their students excited to learn new words. Experts from Chicago think it can help improve your context understanding by teaching you new words and new ways to find them. In short, Wordle helps you improve your language by keeping people interested in learning vocabulary, and improving your context skills. 

Is Wordle addictive? Some people say it is addictive because Wordle activates both the language and logic parts of the brain. So, when you get the day’s Wordle correct, you feel happy because of a chemical in your brain. You could say it is not addictive because you can’t play endlessly, and it is not like gambling because there is no money involved. Even the maker of Wordle (Josh Wardle) says it is not meant to take up more than three minutes a day. But with this same logic, Wordle can be addictive because of a theory of Scarcity. The idea is that if something is in limited supply, people want it even more. 

So whether Wordle is addictive or not is up to you.◾️

©2020 India Society of Worcester, Massachusetts - All Right Reserved. Contact Us      Privacy Policy

Powered by Wild Apricot Membership Software